செவ்வாய், செப்டம்பர் 29, 2009

வாணிவிழா 2009

யாழ் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்கம் கொழும்பு
வாணிவிழா 2009

மானம்பூ வாழை வெட்டி மர்த்தனியின் தசமியிலே
ஆனபடி பாட்டுரைக்க அடிகொடுப்பாய் - தேனிதழின்
இனிமை சேர்க்கின்ற இசையோடு தமிழ் சொல்லும்
கனிவை கொடுக்கும் கலை

கலைவாணி உந்தனதுகழல்நாடி நின்றதனால்
பலவாறும் நுட்பங்கள் படிப்பித்தாய் - தருவாயே
என்றும் குறையாத இன்பங்கள் எங்களுக்கு
பண்பெணும் குணத்தையும் பார்

வெள்ளைத்தாமரையில் வீற்றிருந்து தமிழ் தந்து
நல்லவற்றைக் காக்கின்ற நாயகியே - வல்லவளே
தோல்விகள் தாங்கும் துணிவை நீ தந்திடுக
ஆள்வது கொடுமை அரசு!!

முப்பெரும் தேவியரும் முறைவைத்து தமிழருக்கு
தப்புற வழியெல்லாம் தந்தருளும் - துப்புரவு
என்ற நிலை விரும்பும் எம்மினத்தை சாக்கடையில்
கொன்று போடாமல் கொணர்!!!!


28 09 2009

1 கருத்து:

கிடுகுவேலி சொன்னது…

//....முப்பெரும் தேவியரும் முறைவைத்து தமிழருக்கு
தப்புற வழியெல்லாம் தந்தருளும் - துப்புரவு
என்ற நிலை விரும்பும் எம்மினத்தை சாக்கடையில்
கொன்று போடாமல் கொணர்!!!!..///

ம்ம்ம் இன்றளவிலும் எமது நிலை தப்புவதாகவே இருக்கிறது. இதனால்தானோ நாம் எல்லாவற்றையும் இழக்கிறோம். நல்ல கவிதை...! வாழ்த்துக்கள் தொடரட்டும்.