வெள்ளி, ஏப்ரல் 17, 2009

வன்முறைதான் என்ரை வழி

கேட்டன் பாருன்னைக் கிளுகிளுப்பாய் இல்லாமல்
மோட்டு வளைபார்த்து முறைக்கிறியே- பாட்டை விட்டு
வெள்ளை வாகனத்தில் விரைந்துன்னைக் கடத்தோணும்
கள்ளியே உன்மனத்தைக் கரை!!

கரையைத் தேடிவந்து கவிழ்ந்து தலைநின்றால்
இரையில் மொய்த்துவிடும் இலையான்கள்- அடிபோடி
மென்மை வெளிப்படுத்தல் விளங்காட்டில் இனிமேலும்
வன்முறைதான் என்ரை வழி!!

கடிதங்கள் எழுதிக் கனவினிலை மனுப்போட்டுத்
தடிமனாய்ப் போச்செனக்கு தலைவலியும்- வடிவழகி
எண்டுநினைப்போ? இரு,பாரன் பல்குழலில்
குண்டுகள் அடிப்பேன் குறி

அகதிபோல் ஓடி அடிவாங்கித் தெருநாயாய்ப்
பகலிலே வதைபட்ட பாடமிது- இனிமேலும்
கேட்டல் மறுத்தல் எனுங்கதைகள் கிடையாது
வேட்டொலி சொல்லும் விடை!!!

கி.குருபரன்.
17.04.2009

5 கருத்துகள்:

வேல் சாரங்கன் சொன்னது…

நல்ல வழி தான்... எதுக்கும் ஒரு எச்சரிக்கை இருக்கட்டும்.... நல்ல கவிதை!!

Thejo சொன்னது…

கனகாலமாப்போச்சண்ணை எங்கட யாழ்ப்பாணத்து தமிழில கவிதை கண்டு...மணியா இருக்கு! நல்லா பாதிக்கப்பட்டிருக்கிறியள் போலை

கிருஷ்ணபிள்ளை குருபரன் சொன்னது…

ம்
நன்றி உங்கடை கருத்துகளுக்கு

Gajen சொன்னது…

உணர்ச்சி வசப்பட்டு அப்படி இப்படி ஏதும் செஞ்சு போடாதையுங்கோ
பிறகு, பேப்பரில நியுஸ் வரும்

Tharshy சொன்னது…

யாழ்ப்பாணத்து தமிழில கவிதை....:) நல்லாயிருக்கு....